பாடல்
உன்னைக் காண்கிறார் உன்
Unnaik Kaannkiraar Un
Fr. S. J. Berchmans
உன்னைக் காண்கிறார் உன்
கண்ணீர் துடைக்கிறார் - இயேசு
நீ அழ வேண்டாம் அழ வேண்டாம்
அதிசயம் செய்திடுவார் - உன்னை
நோய் நொடியில் வாடுகின்ற
உன்னைக் காண்கிறார்
நொடிப் பொழுது சுகம் தந்து
உன்னைத் தேற்றுவார்
– நீ அழ
கடன் தொல்லையால் கதறுகின்ற
உன்னைக் காண்கிறார்
உடன் இருந்து நடத்திடுவார்
ஒருபோதும் கைவிடார்
– நீ அழ
எதிர்க் காற்றோடு போராட்டமா
உன்னைக் காண்கிறார்
உன் படகில் ஏறுகிறார்
அமைதி தருகிறார்
– நீ அழ
உனக்கெதிரான ஆயுதங்கள்
வாய்க்காதே போகும்
உன்னை எதிர்த்து வழக்காடுவோர்
உன் சார்பில் வருவார்கள் இன்று
– நீ அழ