நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

உங்க வசனம் என் மனமகிழ்ச்சி

Unga Vasanam En Manamakilchchi

Lucas Sekar

உங்க வசனம் மனமகிழ்ச்சியாய் இல்லாம போனா

என் துக்கத்திலே அழிந்து போயிருப்பேன் (2)

பாதைக்கு வெளிச்சமல்லோ

பேதைக்கு தீபமல்லோ (2)

– உங்க வசனம்

மரண இருளில் நடக்கின்ற போது

கோலும் தடியுமாக தேற்றுதய்யா உம் வசனம் (2)

துன்பத்தின் பாதையிலே நடக்கின்ற போது (2)

உயிர்ப்பித்து உயர்த்துதய்யா –

உம் வசனம் தானய்யா (2) – உங்க வசனம்

உமது வேதத்தை இரவும் பகலும்

தியானம் செய்வதினால்

பாக்கியமாய் உயர்த்துதய்யா (2)

பச்சையான மரமாக இலையுதிராமல் (2)

காலமெல்லாம் கனிகொடுத்து உயர்த்துதய்யா

உம் வசனம் –(2) – உங்க வசனம்

உமது வசனம் உட்கொள்ளும் போது

இதயம் அனலாக கொழுந்து விட்டு

எரியுதய்யா (2)

உலர்ந்த எலும்பெல்லாம்

உயிர்பித்து எழும்புதய்யா (2)

சேனையாய் எழும்பி நின்று

சத்துருவை துரத்துதய்யா

– உங்க வசனம்