நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

உங்க கிருபை இல்லாம வாழ முடியாதய்யா

Unga Kirupai Illaama Vaala Mutiyaathayyaa

Lucas Sekar

உங்க கிருபை இல்லாம

வாழ முடியாதய்யா

உங்க கிருபை இல்லாம

வாழ தெரியாதய்யா

நான் நிற்பதும் உங்க

கிருபை தான்

நான் நிலைப்பதும் உங்க

கிருபை தான் நான்

நிற்பதும் நிலைப்பதும் உங்க

கிருபைதானப்பா (2)

காலையில் எழுந்தவுடன்

புது கிருபை தாங்குது

வாழ்நாள் முழுவதும்

மகிழ்ச்சிக்குள்ளே நல்லது (2)

நிர்மூலமாகாமலே

இதுவரை காத்தீர் ஐயா

பெலவீன நேரங்களில் உம்

கிருபை தாங்கினதய்யா

என் அரணும் என் கோட்டை

உயர்ந்த அடைக்கலம் நீரே

– உங்க கிருபை

உமது கிருபையினால்

சத்துருக்களை அழித்திடுவீர்

ஆத்துமாவை சஞ்சலப்படுத்தும்

யாவரையும் சங்கரிப்பீர்

உனது அடிமை நான் ஐயா

எனது தெய்வம் நீர் ஐயா

நான் நம்பும் கேடகம் நீரே என்

கோட்டை நீர் ஐயா

என் கோட்டை என் துருகம் நான் நம்பும்

கேடகம் நீரே (2)

– உங்க கிருபை

எப்பக்கம் நெருக்கப்பட்டும்

ஒடுங்கி நானும் போவதில்லை

கிருபை மேல் கிருபை தந்து

கால் ஊன்றி நடக்க செய்தீர்

மான்களின் கால்களை போல

பெலனாய் ஓட செய்தீரே

உயர்ந்த ஸ்தலங்களில் என்னை

திடனாய் நடக்க செய்தீரே

என் அரணும் கோட்டை

உயர்ந்த அடைக்கலம் நீரே

– உங்க கிருபை