உனக்குள் இருப்பது அது ராஜாவின் அபிஷேகம்
Unakkul Iruppathu Athu Raajaavin Apishaekam
Moses Rajasekar
உனக்குள் இருப்பது அது
ராஜாவின் அபிஷேகம்
எனக்குள் இருப்பது அது
கர்த்தரின் அபிஷேகம்
நமக்குள் இருப்பது அது
தெய்வீக அபிஷேகம்
வாலாக்காமல் தலையாக்கும்
மேலான அபிஷேகம்
நம்மை கீழாக்காமல் மேலாக்கும்
தெய்வீக அபிஷேகம்
அபிஷேகம் … அபிஷேகம்…
அபிஷேகம் …. அபிஷேகம்
ஆரோனின் சிரசின் மேல்
வடிந்த அபிஷேகம்
பார்வோனின் சேனைகளை
விரட்டின அபிஷேகம்
மோசேயின் கன்மலை மேல்
இறங்கின அபிஷேகம்
இன்று ஆசையோடு தரிசித்த நான்
விரும்பும் அபிஷேகம்
– அபிஷேகம்
சாமுவேல் தலையின் மேல்
இறங்கின அபிஷேகம்
தாவீதின் கூடாரத்தை
நிரப்பின அபிஷேகம்
எலியாவின் சால்வையில்
இருந்த அபிஷேகம்
எலிசாவை வல்லமையால்
நிரப்பின அபிஷேகம்
– அபிஷேகம்
பெந்தகோஸ்தே நாளிதே
இறங்கின அபிஷேகம்
அக்கினி மயமான நாவுகளாக
அமர்ந்த அபிஷேகம்
பிரகாசிக்கும் சுடர்களாக
மாற்றும் அபிஷேகம் – நாம்
விசுவாசிக்கும் கானானுக்குள்
சேர்க்கும் அபிஷேகம்
– அபிஷேகம்