நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

உனக்கு விரோதமாய் எழும்பும் ஆயுதம்

Unakku Virothamaay Elumpum Aayutham

Moses Rajasekar

உனக்கு விரோதமாய் எழும்பும் ஆயுதம்

வாய்க்காதே வாய்க்காதே

ஒருவழியாய் வருவான் – எதிரி

ஏழு வழியாய் ஓடுவான் – 2

வெட்கப்பட்டு போவதில்லையே நீ

வெட்கப்பட்டு போவதில்லையே நீ – 2

– உனக்கு

எப்பக்கம் நெருக்கினாலும்

ஒடுங்கி நீ போவதில்லை

கலக்கமடைந்தாலும் மனமுறிவடைதில்லை

துன்பப்படுத்தினாலும் கைவிடப்படுவதில்லை

கீழே விழுந்தாலும் மடிந்து நான் போவதில்லை

ராஜா இயேசு நம்ம பக்கமே

அவர் சேனை என்றும் நம்ம பக்கமே – 2

வெற்றி வெற்றி வெற்றியே

வெற்றி வெற்றி வெற்றியே – 2

– உனக்கு

எதிர்த்து வரும் எரிகோவை

தகர்த்தெரியும் வல்லமை

தடுத்து நிற்கும் சாத்தானை

முறித்தெரியும் வல்லமை

அக்கினியில் நடந்தாலும் எரிந்திடாத வல்லமை

தண்ணீரிலே நடந்தாலும் மூழ்கிடாத வல்லமை

ராஜா இயேசு நம்ம பக்கமே

அவர் சேனை என்றும் நம்ம பக்கமே – 2

வெற்றி வெற்றி வெற்றியே

வெற்றி வெற்றி வெற்றியே – 2

– உனக்கு