நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

உனக்கெதிரான ஆயுதங்கள் வாய்க்காதே மகனே

Unakkethiraana Aayuthangal Vaaykkaathae Makanae

Lucas Sekar

உனக்கெதிரான ஆயுதங்கள்

வாய்க்காதே மகனே

உனக்கெதிரான ஆயுதங்கள்

வாய்க்காதே மகளே

நீ உயிரோடு இருக்கும் வரையிலும்

எதிர்ப்பவன் இல்லை (2)

உன்னை நான் காப்பாற்றி

அடிக்கடி தண்ணீர் பாய்ச்சிடுவேன் (2)

இரவினிலும் பகலினிலும் சேதமில்லாமல்

காத்திடுவேன் (2)

உன்னைக் கொண்டு மலைகளையும்

குன்றுகளை நான் தகர்த்திடுவேன் (2) – நீ உயிரோடு

ஏழு மடங்கு அக்கினியில்

சேதமில்லாமல் காத்திடுவேன் (2)

ஒரு வழியாய் வந்தவர்கள் ஏழு வழியாய்

ஓடச்செய்வேன் (2)

உன்னைக் கொண்டு செய்ய நினைத்தது

தடை செய்ய யாருமில்லை (2)

– நீ உயிரோடு

சிங்கத்தின் மேல் நீ நடந்திடுவாய்

சீறும் சர்ப்பத்தை மிதித்திடுவாய் (2)

உனக்கெதிராய் எழுதப்படும் சட்டங்களை

நான் மாற்றிடுவேன் (2)

உன்னைக் கொண்டு தேசத்திலே

என் நாமம் முழங்கச் செய்வேன் (2)

– நீ உயிரோடு