நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

உம்மிலே பெலன் கொள்ளும் மனிதர்களெல்லாம்

Ummilae Pelan Kollum Manitharkalellaam

Moses Rajasekar

உம்மிலே பெலன் கொள்ளும்

மனிதர்களெல்லாம்

உண்மையிலே பாக்கியவான்கள்

உம்மிலே ஆறுதல் கொள்ளும்

நாங்களெல்லாம் பாக்கியவான்கள் – 2

பாக்கியவான்கள் பாக்கியவான்கள்

நாங்களெல்லாம் பாக்கியவான்கள்

இருளின் மிரளல்கள் தரும் கடும் நிலவுகள்

மருளும் என் மனம் கலங்கும் ஒரு புறம்

உருளும் இவ்வுலகம் புரளும் மறுபுறம்

அருள் ஏராளம் தரும்

உந்தன் கிருபை தாங்குது

– என்னை பாக்கியவான்கள்

வியாதி படுக்கைகள் தரும் கண்ணீர் சிதறல்கள்

மரண வாதைகள் வலிக்கும் சோகங்கள்

நெருங்கும் உம் கரம் வருடும் என் முகம்

கரடு முரடு பாதை கூட

மென்மையாகுதே!

– பாக்கியவான்கள்

நேசர் மடியிலே தவழ்ந்து தினமும் நான்

மார்பினிலே சாய்ந்து இளைப்பாறுவேன்

சிலுவை என் தஞ்சம் எனது அடைக்கலம்

அஞ்சும் எந்தன் நெஞ்சம்

அடையும் ஆறுதல்!

– பாக்கியவான்கள்