பாடல்
உம்மைத் துதிக்கிறோம்,
Ummaith Thuthikkirom,
உம்மைத் துதிக்கிறோம்,
யாவுக்கும் வல்ல பிதாவே;
உம்மைப் பணிகிறோம் ஸ்வாமீ,
ராஜாதி ராஜாவே;
உமது மா மகிமைக்காக கர்த்தா
ஸ்தோத்திரம் சொல்லுகிறோமே.
கிறிஸ்துவே, இரங்கும் சுதனே, கடன் செலுத்தி,
லோகத்தின் பாவத்தை நீக்கும் தெய்வாட்டுக்குட்டி,
எங்கள் மனு கேளும் பிதாவினது
ஆசனத் தோழா இரங்கும்.
– உம்மைத்
நித்திய பிதாவின் மகிமையில் ஏசுவே
நீரே பரிசுத்தாவியோடேகமாய் ஆளுகிறீரே.
ஏகமாய் நீர் அர்ச்சிக்கப்படுகிறீர்.
உன்னத கர்த்தரே. ஆமேன்.
– உம்மைத்