பாடல்
உம்மை பாடாமல்
Ummai Paadaamal
Japhia Joyson
உம்மை பாடாமல்
யாரை நான் பாடுவேன்
உம்மைத் துதிக்காமல்
யாரை நான் துதிப்பேன்
துதியும் உமக்கே அல்லேலூயா
கனமும் உமக்கே அல்லேலூயா
மகிமை உமக்கே அல்லேலூயா
புகழ்ச்சியும் உமக்கே அல்லேலூயா
உளையான சேற்றிலிருந்து எடுத்தீரே
உன்னத அனுபவம் தந்தீரே
– உம்மை
துக்கங்களை சந்தோஷமாய் மாற்றினீர்
துயரங்களை மகிழ்ச்சியாய் மாற்றினீர்
– உம்மை
ஒன்றுக்கும் உதவாத என்னையும்
உருவாக்கி உயர்த்தின தெய்வவே
– உம்மை
ஜீவன் சுகம் பெலன் தந்து காத்தீரே
ஜீவனுள்ள நாளெல்லாம் பாடுவேன்
– உம்மை