நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

உம்மை அதிகம் அதிகம் நேசிக்க கிருபை வேண்டுமே

Ummai Athikam Athikam Naesikka Kirupai Vaenndumae

Johnsam Joyson

உம்மை அதிகம் அதிகம்

நேசிக்க கிருபை வேண்டுமே

பொய்யான வாழ்க்கை

வாழ்ந்த நாட்கள் போதுமே

மெய்யாக உம்மை நேசித்து

நான் வாழ வேண்டுமே

– உம்மை அதிகம்

உயர்வான நேரத்திலும்

என் தாழ்வின் பாதையிலும்

நான் உம்மை மட்டும் நேசிக்க வேண்டும்

ஏமாற்று வாழ்க்கை வாழ்ந்த நாட்கள் போதுமே

ஏமாற்றமில்லா வாழ்க்கை

நானும் வாழ வேண்டுமே

– உம்மை அதிகம்

பெலவீன நேரத்திலும்

பெலமுள்ள காலத்திலும்

நான் உம்மை மட்டும் நேசிக்க வேண்டும்

உம்மை விட்டு தூரம் போன நாட்கள் போதுமே

உம்மை விடாமல் உம்மை

பற்றிக்கொண்டு வாழ வேண்டுமே

– உம்மை அதிகம்