நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

உம்மை ஆராதிக்க தான் என்னை அறிந்தேன்

Ummai Aaraathikka Thaan Ennai Arinthaen

Ravi Bharath

உம்மை ஆராதிக்க தான் என்னை அறிந்தீர்

உம்மை ஆர்பரிக்க தான் என்னை அழைத்தீர்

உந்தன் நாமம் உயர்த்தவே என்னில் ஜீவன் கொடுத்தீர்

உம்மை பற்றிக்கொள்ளத் தான் என்னை படைத்தீர்

ஏழு விண்மீன் கைதனில்

உம் விளக்கு மத்தியில்

உலாவிடும் உன்னதர்

நீரே உமக்கு நிகர்,

முந்தினவரும் நீரே தான் பிந்தினவரும் நீரே தான்

மரித்தவரும் நீர் தான் மூன்றாம் நாளில்

உயிர் பெற்று வாழ்கின்ற வேந்தன் உம்மை

– ஆராதிக்க தான்

எப்பக்கம் கூர்மையும்

பட்டயம் பற்றினிரோ

கண்கள் அக்னி ஜ்வாலையோ

கரங்கள் வெண்கலமோ

தேவ ஆவி எழும்பு விண்மீங்களும் எழும்பு

எல்லாம் இயேசுவில் உண்டு

அப்பேர்ப்பட்ட அழகுள்ள ஆண்டவர்

மைந்தன் உம்மை

– ஆராதிக்க

பரிசுத்தர் நீர் தானே சத்தியரும் நீர் தானே

சாவியின் திறவுகோல் கொண்டவரும் நீர் தானே

நீர் பூட்டிடும் வாசலை மானிடன் திறப்பானோ

நீர் திறந்த வாசலை பூட்டி வைக்கக்கூடுமோ

நீர் ஆள்கின்றீர் என்றும் உம்மை

– ஆராதிக்க….

உண்மையும் சத்தியமும் உள்ளடக்கிய சாட்சியே

தேவனின் சிருஷ்டிக்கு ஆதியும் ஆமென் நீரே

நீதியுள்ள நாதனே நீர் என்றும் நித்தியரே

ஆலயத்தின் ஆண்டவா ஆராதனை நாயகா நீர்

வாழ்க வாழ்க என்றும்மை

– ஆராதிக்க….

அப்பா பிதாவே நான் உம்மை துதிப்பேன்

என் ஆத்ம நேசரே நான் உம்மை துதிப்பேன்

பரிசுத்த ஆவியே என்றும் உம்மை துதிப்பேன்

மூன்றில் ஒன்றாய் விளங்கும் என் தேவ தேவனே