நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

உம்மை ஆராதிக்க கூடியுள்ளோம்

Ummai Aaraathikka Kootiyullom

Bishop Gnanaprakasam

ஆராதிக்க உம்மை ஆராதிக்க

உம்மை ஆராதிக்க கூடியுள்ளோம்

ஊற்றும்மையா நிரப்பும்மையா

உன்னத பரலோக அபிஷேகத்தால்

உன்னதரே உம்மை ஆராதிப்போம்

உயர்ந்தவரே உம்மை ஆராதிப்போம்

வல்லவரே உம்மை ஆராதிப்போம்

வழிகாட்டியே உம்மை ஆராதிப்போம்

– ஆராதிக்க உம்மை

நம்பிக்கையே உம்மை ஆராதிப்போம்

நங்கூரமே உம்மை ஆராதிப்போம்

புகலிடமே உம்மை ஆராதிப்போம்

புகழ்ச்சி நீரே உம்மை ஆராதிப்போம்

– ஆராதிக்க உம்மை

அற்புதரே உம்மை ஆராதிப்போம்

அடைகலமே உம்மை ஆராதிப்போம்

பரிசுத்தரே உம்மை ஆராதிப்போம்

பரிகாரியே உம்மை ஆராதிப்போம்

– ஆராதிக்க உம்மை