நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

உமது சமூகம் வரும் போதெல்லாம்

Umathu Samookam Varum Pothellaam

Lucas Sekar

உமது சமூகம் வரும் போதெல்லாம்

எங்க கண்ணீரெல்லாம் மாறுகின்றது (2)

உமது சமூகத்தில் நித்திய மகிழ்ச்சி

உமது சமூகத்தில் பேரானந்தம்

ஒருநாளும் மாறாதைய்யா

ஒரு நாளும் ஒரு போதும் மாறாது

மாறாது உம் சமூகமே உம் சமூகமே

– உமது

மேற்கிலும் கிழக்கிலும்

வடக்கிலும் தெற்கிலும்

அலைந்து நான் திரிந்தாலும்

விடுதலை இல்லையே (2)

நித்திய ஜீவனுள்ள

வார்த்தைகள் உம்மிடமுண்டு (2)

உமது வார்த்தையால்

திருப்தி ஆகிறேன் (2)

– உமது

பனிரெண்டு வருடமாய்

பெரும்பாடுள்ள ஒரு பெண்

அநேக வைத்தியரால்

கைவிடப்பட்டவளாய் (2)

இயேசுவின் சமூகத்திற்கு

ஓடோடி வந்தானே (2)

இயேசுவின் வஸ்திரத்தை

தொட்டதால் சுகமானாள் (2)

– உமது

இஸ்ரவேலின் சேனைகள் முன்னே

கடந்திட்ட தேவசமூகம்

ஒருவரும் பெலவினராய்

இருந்ததுமில்லையே (2)

இரவினில் அக்கினி ஸ்தம்பம்

பகலின் மேகஸ்தம்பம் (2)

பாதுகாத்து நடத்தினீரே

சேனைகளின் தெய்வமே (2)

– உமது

உமது சமூகத்திலே

வாசமாய் இருப்பவர்கள்

திருப்தியாய் சாப்பிடவும்

நல்ல வஸ்திரம் தரிக்கவும் (2)

கையிட்டு செய்கின்ற

வேலையெல்லாம் ஆசீர்வதிப்பீர் (2)

ஆசீர்வாத வாய்க்காலாய்

எங்கள மாறசெய்வார் (2)

– உமது