பாடல்
உம் சித்தம் செய்வதில்தான்
Um Siththam Seyvathilthaan
Fr. S. J. Berchmans
உம் சித்தம் செய்வதில்தான் – (நான்)
மகிழ்ச்சி அடைகின்றேன்
உம் வசனம் இதயத்திலே, தினம்
தியானமாய்க் கொண்டுள்ளேன்
அல்லேலூயா அல்லேலூயா
மகிமை உமக்குத்தான்
அல்லேலூயா அல்லேலூயா
மாட்சிமை உமக்குத்தான்
காத்திருந்தேன் பொறுமையுடன்,
கேட்டீரே என் வேண்டுதலை
குழியிலிருந்து தூக்கி – (கன்)
மலையில் நிறுத்தினீரே
– அல்லேலூயா
துதிக்கும் புதியபாடல் (என்)
நாவில் எழச்செய்தீரே – உம்மைத்
பலரும் இதைப் பார்த்துப் பார்த்து,
நம்புவார்கள் உம்மையே
– அல்லேலூயா
எத்தனை எத்தனை நன்மைகளோ,
என் வாழ்வில் நீர் செய்தீர்
எண்ண இயலாதையா,
விவரிக்க முடியாதையா
– அல்லேலூயா
மாபெரும் சபை நடுவில்
உம் புகழை நான் அறிவிப்பேன்
மௌனமாய் இருக்கமாட்டேன்
மனக்கண்கள் திறந்தீரே
– அல்லேலூயா