பாடல்
உம் கிருபை எனக்கு போதுமய்யா
Um Kirupai Enakku Pothumayyaa
Pastor K. S. Wilson
உம் கிருபை எனக்கு போதுமய்யா
வேறொன்றும் எனக்கு வேண்டாமய்யா
கிருபை கிருபை
கிருபை கிருபை
நிர்மூலமாகாமல் இம்மட்டும் காத்ததும்
அப்பா உம் கிருபை தானே
சூழ்நிலை எல்லாம் மாறின போதும்
காத்ததும் கிருபை தானே – 2
– கிருபை
ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நொடியும்
காத்ததும் கிருபை தானே
விசுவாசப் பாதையில் தளராமல் ஓடிட
பெலன் தந்த கிருபை தானே – 2
– கிருபை
மலைகள் எல்லாம் விலகினப் போதும்
விலகாத கிருபை தானே
மனிதர்கள் எல்லாம் மாறின போதும்
மாறாத கிருபை தானே – 2
– கிருபை
அதிசயமாய் என்னை இம்மட்டும் நடத்தியதும்
அப்பா உம் கிருபை தானே
ஜீவனுள்ள நாளெல்லாம் உம்மை போற்றி பாடுவேன்
கிருபையை பாடிடுவேன் – 2
– கிருபை