பாடல்
உள்ளத்தின் ஆழம் பொங்குதே
Ullaththin Aalam Ponguthae
உள்ளத்தின் ஆழம் பொங்குதே
உத்தமரே உம் அன்பினால்
பாத்திரம் நிரம்பி வழியுதே
உன்னதத்தின் ஆவியினால்
துதிப்பேன் களிப்பேன் மகிழ்வேன்
மன்னவன் மார்பினிலே அல்லேலூயா
நேசத்தின் உச்சித நேசரே
கரையில்லையே உம் அன்பிற்கே
கல்வாரி தரிசனம் தந்தீரே
கருணையாய் பேசினீரே
– உள்ளத்தின்
ஆனந்தக் கண்ணீர் நதியாக
ஊற்றிடுவேன் உந்தன் பாதத்தில்
பொன்முகம் நோக்கி பார்த்துமே
பூரிப்பாய் வாழ்ந்திடுவேன்
– உள்ளத்தின்
ரசத்தினால் பீறிடும் துருத்தி போல்
உம் அன்பென்னை நெருக்கி ஏவுதே
ஊழியம் செய்யத் தியாகமாய்
தந்தேன் உம் சேவை செய்ய
– உள்ளத்தின்