நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

உள்ளங்கால் தொடங்கி

Ullangaal Thodangi

Lucas Sekar

உள்ளங்கால் தொடங்கி

உச்சந்தலை மட்டும்

கொடிய வேதனையோ – மகனே

கொடிய வேதனையோ – மகளே

உன் சுகவாழ்வு இன்று துளிர்த்தது

புது வாழ்வு இன்று வந்தது

தேவரீர் எழுந்தருளி சீயோனுக்கு

தயை செய்து அதற்காய் குறித்த

காலமும் வந்தது

அதற்காய் குறித்த நேரமும் வந்தது

உன் சுகவாழ்வு இன்று துளிர்த்தது

புது வாழ்வு இன்று வந்தது

இலையும் இல்லாம கனியும் இல்லாம

பட்டுப் போன மரம் போல ஆனாயோ (2)

பச்சமரமாய் உன்னை

மாற்றிடுவார் நம் தேவன் (2)

பூத்துக் காய்த்து உன்னை

நிரப்பச் செய்வார் (2)

– உன் சுகவாழ்வு

உலர்ந்த எலும்புகளின் பள்ளத்தாக்கிலே

உயிறற்று நீயும் போனாயோ (2)

மகிமையின் ஆவியாலே உன்னை

அவர் நிரப்பிடுவார் (2)

காலூன்றி நீயும் எழும்பி நிற்பாய்

– உன் சுகவாழ்வு

கொடியவரின் சீரல் மோதி

அடிக்கயிலே

பெலனற்று நீயும் போனாயோ (2)

ஏழைகளின் பெலனும்

அவர் எளியவரின்

திடனும் அவர் (2)

வெயிலுக்கு ஒதுங்கி நிற்கும்

நிழலாவார் (2)

– உன் சுகவாழ்வு