பாடல்
உலர்ந்த எலும்புகள் உயிர் பெற்று எழ வேண்டும்
Ularntha Elumpukal Uyir Pettu Ela Vaenndum
Fr. S. J. Berchmans
உலர்ந்த எலும்புகள் உயிர் பெற்று எழ வேண்டும்
ஒன்று சேர்ந்து ஒரே சபையாக வேண்டும்
அசைவாடும் அசைவாடும்
ஆவியான தேவா – இன்று
நரம்புகள் உருவாகட்டும் – உம்
சிந்தை உண்டாகட்டும்
– ஐயா அசைவாடும்
சதைகள் உண்டாகட்டும் – உம்
வசனம் உணவாக்கட்டும்
– ஐயா அசைவாடும்
தோலினால் மூடணுமே
பரிசுத்தமாகணுமே
– ஐயா அசைவாடும்
காலூன்றி நிற்கணுமே
கர்த்தரோடு நடக்கணுமே
– ஐயா அசைவாடும்
சேனையாய் எழும்பணுமே
தேசமெங்கும் செல்லணுமே
– ஐயா அசைவாடும்