நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

துதியின் சத்தத்தோடு ஆராத்திப்போம் நாம்

Thuthiyin Saththaththodu Aaraaththippom Naam

Bishop Gnanaprakasam

துதியின் சத்தத்தோடு ஆராத்திப்போம் நாம்

துதியின் சத்தத்தோடு பலியிடுவோம் (2)

உதடுகளின் கனியாகிய

ஸ்தோத்திர பலி செலுத்தி ஆராதிப்போம்

ஸ்தோத்திர பலி ஸ்தோத்திர பலி

ஸ்தோத்திர பலி செலுத்தி ஆராதிப்போம்-2

– துதியின்

துதியின் சத்தம் அலங்கத்தை அதிர பண்ணும்

துதியின் சத்தம் அற்புதம் நடக்கச் செய்யும்

துதிகளில் இன்பமானது அல்லேலூயா

துதிகவே ஏற்றது

– துதியின்

துதியின் சத்தம் சாத்தானை கலங்க பண்ணும்

துதியின் சத்தம் சத்துருவின் சதி முறிக்கும்

துதிகளில் இன்பமானது அல்லேலூயா

துதிகவே ஏற்றது

– துதியின்