நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

துதியில் தேவா வருவாய்

Thuthiyil Thaevaa Varuvaay

துதியில் தேவா வருவாய்

நான் துதித்து துதித்து

உம்மைப் பாடி மகிழ்ந்திடவே

துதியில் தேவா வருவாய்

தூயவர் கோனே துணைபுரிமானே

தூய்மை கிடைக்குமென்று

துதிக்கிறேன் தானே

துன்பம் இந்நேரம் உம்மைத் தொடரத்

தொடரப் பேயின் கோபம் மிகுந்திடுதே

துன்பம் இந்நேரம்…

இன்பம் மிகுதே தம்பிரான் பாதம்

கெம்பீரம் பாடி அம்பரமேகம்

– துதியில்

கலங்குதே இந்நேரம் என் கலமும்

துலக்கமின்றி மயங்கித் தியங்குகிறேன்

கலங்குதே இந்நேரம்…

காடி தான் தேனோ கல்வாரி மலையில்

கருதுவோர் பருகும் கானாவூர் ரசமே

– துதியில்

அகமே வர்ந்தருவாய் நான் அல்லும்

பகலும் உம்மைப் பாடி மகிழ்ந்திடவே

அகமே வந்தருவாய்…

தியாகம் செய்யவே யேகோவா பாதம்

தாகம் மிகுந்தேன் ஏழையிந்நேரம்

– துதியில்

ஆறு லட்சம் பேரில் நடு உதித்து

உதித்துச் சென்ற அதிரூப சொரூபா

ஆறு லட்சம் பேரில்..

கூறினீரல்லோ கூடியிருக்க

கொற்றவர் சேவை குறைவின்றி ஒழுக

– துதியில்