நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

துதிபலிய செலுத்த வந்தோம் இயேசய்யா

Thuthipaliya Seluththa Vanthom Iyaesayyaa

Lucas Sekar

துதிபலிய செலுத்த

வந்தோம் இயேசய்யா

உம்மை ஆராதிக்க

கூடி வந்தோம் இயேசய்யா (2)

நீர் உயர்ந்தவர்

நீர் வல்லவர் (2)

இந்த உலகை ஆளும் தெய்வம் நீரே (2)

என்னிலே ஒன்றுமில்லை

ஆனாலும் நேசித்தீரே (2)

என்னிலே நன்மையில்லை

ஆனாலும் உயர்த்தினீரே (2)

தகப்பனை போல

என்னை சுமந்தீரய்யா

ஒரு தாயைப் போல

என்னை தேற்றினீரே (2)

சுமந்தீரய்யா தேற்றினீரே

சுமந்தீரய்யா என்னை தேற்றினீரே

ஆராதனை உமக்கே ஐயா எங்கள்

ஆராதனை உமக்கே ஐயா

– ஆராதனை (10)

பிறந்த நாள் முதலாய்

தூக்கி எறியப்பட்டேன் (2)

ஒரு கண்ணும் என்மேலே

இரக்கமாய் இருந்ததில்லை (2)

பிழைத்திரு என்று

என்னை தூக்கினீரே

உம் மகனாகவே

என்னை ஏற்றுக் கொண்டீர்

பிழைத்திரு என்று

என்னை தூக்கினீரே

ஆராதனை உமக்கே

ஐயா எங்கள்

ஆராதனை உமக்கே ஐயா

– ஆராதனை (10)

உமது இரக்கத்திற்கு

முடிவே இல்லையப்பா (2)

உமது அன்பிற்கு

அளவே இல்லையப்பா (2)

உமது காருண்யம் என்னை

பெரியவனாய்

உயரத்திலே நிறுத்தியதே (2)

உமது காருண்யம் என்னை

பெரியவளாய் (2)

உயரத்திலே நிறுத்தியதே (2)

உயரத்திலே என்னை நிறுத்தியதே

ஆராதனை உமக்கே ஐயா எங்கள்

ஆராதனை உமக்கே ஐயா

– ஆராதனை (10)