பாடல்
துதிக்கு பாத்திரரே எந்தன் துணையானரே
Thuthikku Paaththirarae Enthan Thunnaiyaanarae
Reegan Gomez
துதிக்கு பாத்திரரே எந்தன் துணையானரே
ஆபத்துக் காலத்தில் அடைக்கலமே
ஆதரவே என் அநுகூலமே
உம்மை ஆராதனை செய்கிறேன்
உம்மை ஆராதனை செய்கிறேன் (2)
உன்னதரே உயர்ந்தவரே
உம்மையே ஆராதிப்பேன்
யேகோவா ஷாலோம் நீரே
எந்தன் சமாதானமே
நித்திய மகிழ்ச்சி எனக்குத் தந்தீர்
சஞ்சலம் தவிப்பும் நீக்கிவிட்டீ
– உம்மை ஆராதனைர்
யேகோவா ஷம்மா நீரே
என்னோடு இருப்பவரே
என்ன வந்தாலும் கலங்கிடேனே
அப்பா நீர் என்னோடு இருப்பதினால்
– உம்மை ஆராதனை
யேகோவாநிசி நீரே
எந்த ஜெயக்கொடியே
மனமகிழ்ந்து பாடிடுவேன்
மகிமையாய் நீர் வெற்றி சிறந்தீர்
– உம்மை ஆராதனை