நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

துதிக்க துதிக்க இன்பம் பெருகுதே

Thuthikka Thuthikka Inpam Perukuthae

Lucas Sekar

துதிக்க துதிக்க இன்பம் பெருகுதே

உம்மை துதிக்க துதிக்க

கிருபை பெருகுதே (2)

துதிக்க துதிக்க

உயர்த்தப்படுகிறேன் – உம்மை

துதிக்க துதிக்க

மதிலை தாண்டுவேன் (2)

– துதிக்க

பவுலும் சீலாவும்

இரவெல்லாம் துதிச்சாங்க (2)

துதித்தது இரண்டு பேர்

விடுதலை பலபேர்க்கு (2)

துதிக்க துதிக்க தான்

விடுதலை உண்டு

துதிக்க துதிக்க தான்

இரட்சிப்பு உண்டு (2)

துதிக்க

அசைவில்லா இராஜ்ஜியத்தை

பெறப்போகும் நாமெல்லோரும் (2)

பயத்தோடும் பக்தியோடும்

ஆராதனை செய்யணும் (2)

துதிக்க துதிக்க தான்

விடுதலை உண்டு

துதிக்க துதிக்க தான்

இரட்சிப்பு உண்டு (2)

– துதிக்க

சாம்பலுக்கு பதிலாக

சிங்காரம் தருவாரே (2)

அழுகைக்கு பதிலாக

களிப்பை தருவாரே (2)

துதிக்க துதிக்க தான்

விடுதலை உண்டு

துதிக்க துதிக்க தான்

இரட்சிப்பு உண்டு (2)

– துதிக்க