துன்பம் உன்னை சூழ்ந்தலைக்
Thunpam Unnai Soolnthalaik
துன்பம் உன்னை சூழ்ந்தலைக்
கழித்தாலும் இன்பம் இழந்தேன்
என்றெண்ணி சோர்ந்தாலும்
எண்ணிப்பார் நீ பெற்ற பேராசீர்வாதம்
கர்த்தர் செய்த யாவும் வியப்பைத் தரும்
எண்ணிப்பார் நீ பெற்ற பாக்யங்கள்
கர்த்தர் செய்த நன்மைகள் யாவும்
ஆசீர்வாதம்! எண்ணு ஒவ்வொன்றாய்
கர்த்தர் செய்த யாவும் வியப்பை தரும்
கவலை சுமை நீ சுமக்கும் போதும்
சிலுவை உனக்குப் பளுவாகும் போதும்
எண்ணிப்பார் நீ பெற்ற பேராசீர்வாதம்
கர்த்தர் செய்த யாவும் வியப்பைத் தரும்
– எண்ணிப்பார்
நிலம் பொன்னுள்ளோரை நீ பார்க்கும் போது
நினை கிறிஸ்துவின் ஐசுவரியம் உண்டுனக்கு
பணம் கொள்ளா பேராசீர்வாதத்தைப் பார்
பரலோக பொக்கிஷமும் வீடும் பார்
– எண்ணிப்பார்
அகோர துன்பங்கள் உன்னைச் சூழ்ந்தாலும்
அதைரியப்படாதே கர்த்தர் உன் பக்கம்
அநேகமாம் நீ பெற்ற சிலாக்கியங்கள்
தூதர் உன்னை தேற்றுவார் பிரயாணத்தில்
– எண்ணிப்பார்
அவர் வேளை வரும் போது அன்போடு
உந்தன் குறைகளை நிறைவாக்குவார்
நீயோ வேளை வழியையும் குறிக்காதே
எல்லாவற்றையும் செம்மையாய் செய்குவார்
– எண்ணிப்பார்