நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

துள்ளுதையா, உம் நாமம் சொல்லச் சொல்ல

Thulluthaiyaa, Um Naamam Sollach Solla

Fr. S. J. Berchmans

துள்ளுதையா, உம் நாமம் சொல்லச் சொல்ல

துதித்து துதித்து தினம் மகிழ்ந்து

மகிழ்ந்து மனம் துள்ளுதையா

அன்பு பெருகுதையா – என்

அப்பாவின் நிழல்தனிலே

அபிஷேகம் வளருதையா

எபிநேசர் பார்வையிலே

– துள்ளுதையா

உள்ளங்கள் மகிழுதையா

உம்மோடு இருக்கையிலே

பள்ளங்கள் நிரம்புதையா

பாடித் துதிக்கையிலே

நம்பிக்கை வளருதையா

நாதா உம் பாத்த்திலே

நன்மைகள் பெருகுதையா

நாள்தோறும் துதிக்கையிலே

– துள்ளுதையா

நோய்கள் நீங்குதையா – உம்மை

நோக்கிப் பார்க்கையிலே

பேய்கள் அலறுதையா

பெரியவர் நாமத்திலே

– துள்ளுதையா

கண்ணீர்கள் மறையுதையா

கர்த்தர் உம் சமூகத்திலே

காயங்கள் ஆறுதையா

கருத்தோடு துதிக்கையிலே

– துள்ளுதையா