பாடல்
தூயா தூயா தூயா!
Thooyaa Thooyaa Thooyaa!
தூயா தூயா தூயா! சர்வ வல்ல நாதா!
தேவரீர்க் கெந்நாளும் சங்கீதம் ஏறுமே
தூயா தூயா தூயா! மூவரான ஏகா!
காருண்யரே, தூய திரியேகரே!
தூயா தூயா தூயா! அன்பர் சூழ நின்று
தெய்வ ஆசனமுன்னர் கிரீடம் வைப்பாரே
கேருபீன் சேராபீன் தாழ்ந்து போற்றப் பெற்று
இன்றென்றும் வீற்றாள்வீர், அநாதியே!
தூயா தூயா தூயா! ஜோதி பிரகாசா
பாவக் கண்ணால் உந்தன் மாண்பைக்
காண யார் வல்லோர்
நீரே தூய தூயர், மனோ வாக்குக் கெட்டா
மாட்சிமை, தூய்மை, அன்பும் நிறைந்தோர்
தூயா தூயா தூயா! சர்வ வல்ல நாதா!
வானம் பூமி ஆழி சங்கீதம் ஏறுமே
தூயா தூயா தூயா! மூவரான ஏகா!
காருண்யரே, தூய திரியேகரே!