நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

தூரத்திலே பரலோகம் தெரியுது

Thooraththilae Paralokam Theriyuthu

Moses Rajasekar

தூரத்திலே பரலோகம் தெரியுது – அங்கே

தேவதூதர் பாடும் சத்தம் கேட்குது

ஓசன்னா ஓசன்னா ஓசன்னாவே – 2

தாவீதின் மைந்தனுக்கு ஓசன்னாவே

ஓசன்னா அல்லேலூயா

ஓசன்னா அல்லேலூயா

தங்கத்திலே தெருக்கள் அங்கே தெரியுது

அங்கே அங்கமாக எந்தனுள்ளம் துடிக்குது

சிங்காரவனமான பரலோகம் – அங்கே

மங்காத பெயர் பெற துடிக்கிறேன் – 2

– தூரத்திலே

வச்சிரக்கல்லு இந்திர நீலம் சந்திரகாந்தம்

மரகதம் கோமேதகம் பத்மராகம் புஷ்பராகம்

சுவர்ணரத்தினம் படிகப்பச்சை வைடூரியம்

சுநீரம் சுகந்தி கலந்த கட்டிடம் தெரியுது – 2

– தூரத்திலே

கவலையில்ல கண்ணீரில்ல துக்கமில்ல

அங்கே உயர்வுமில்ல

தாழ்வுமில்ல வேதனையில்ல – 2

திரும்புகிற இடமெல்லாம் ஒளிமயமே

அந்த ஜீவனுள்ள பரலோகம் காணுவேன்

– தூரத்திலே