நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

தூளும் சாம்பலும் ஆகிய நான்

Thoolum Saampalum Aakiya Naan

Moses Rajasekar

தூளும் சாம்பலும் ஆகிய நான்

உம்மோடு பேசத் துணிந்தேன்

எதற்கும் தகுதியில்லை எனக்கு – 2

உம் நாமம் சொல்லத் துணிந்தேன் – நான் – 2

துடைத்துப் போடும் அழுக்கைப் போல

நான் உதறி தள்ளப்பட்டேன் – 2

தெரிந்து கொண்டீர் முன் குறித்தீர் – என்னை – 2

மகனாக மகிமை செய்தீர் – உம்

மகளாக மகிமை செய்தீர் – 2

– தூளும்

கனியற்ற மரம் போல

நான் காய்ந்து உலர்ந்து இருந்தேன் – 2

கருணை வைத்தீர் கரம் பிடித்தீர் – என்னை – 2

கண்ணீரைக் களிப்பாக்கினீர் – என் – 2

– தூளும்