நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

திருக்கரத்தால் தாங்கியென்னை

Thirukkaraththaal Thaangiyennai

திருக்கரத்தால் தாங்கியென்னை

திருசித்தம் போல் நடத்திடுமே

குயவன் கையில் களிமண் நான்

அனுதினம் நீர் வனைந்திடுமே – 2

உம் வசனம் தியானிக்கையில்

இதயமதில் ஆறுதலே

காரிருளில் நடக்கையிலே

தீபமாக வழி நடத்தும்

– திருக்கரத்தால்

ஆழ்கடலில் அலைகளினால்

அசையும் போது என் படகில்

ஆத்ம நண்பர் இயேசுவுண்டு

சேர்ந்திடுவேன் அவர் சமுகம்

– திருக்கரத்தால்

அவர் நமக்காய் ஜீவன் தந்து

அளித்தனரே இந்த மீட்பு

கண்களினால் காண்கின்றேனே

இன்ப கானான் தேசமதை

– திருக்கரத்தால்