பாடல்
திறப்பின் வாசலில் நிற்கின்றேன்
Thirappin Vaasalil Nirkinten
Reegan Gomez
திறப்பின் வாசலில் நிற்கின்றேன்
சுவரை அடைக்க வருகின்றேன்
அழிவின் வழியை நாடுவோர்
ஆயிரம் ஆயிரமே
பரலோக பாதை செல்ல மறந்தோர்
ஆயிரம் ஆயிரமே
சீயோனின் மந்தைகள் கள்ளர்களால்
சிதறி போகின்றதே
நல் மேய்ப்பரே உம் மந்தைகளை – நீர்
தேடி மீட்டிடுமே
– திறப்பின்
கோதுமை மணிகள் மத்தியிலும்
களைகள் பெருகுதே
தங்கத்திற்கொப்பான சீயோன் குமாரர்
களிமண் போலானார்கள்
– திறப்பின்
சீயோனே இன்றே எழும்பிடு
வல்லமை தரித்துக்கொள்
மேகங்கள் மீது மணவாளன் இயேசு
வந்திடும் நாள் சமீபம்
– திறப்பின்
இரவும் பகலும் கண்ணீர் சிந்தி
கதறி ஜெபம் செய்வோம்
இந்நிலை கண்டும் தாமதம் கொண்டால்
குற்றம் நம் மீதல்லோ
– திறப்பின்