நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

திறந்த வாசலை எனக்கு தந்தார்

Thirantha Vaasalai Enakku Thanthaar

Pastor K. S. Wilson

திறந்த வாசலை எனக்கு தந்தார்

ஒருவனும் பூட்ட முடியாதே

அல்லேலூயா ஆமென் அல்லேலூயா

அல்லேலூயா ஆமென் அல்லேலூயா – 2

ஜெயத்தை தந்திடுவார்

ஜெயமாய் நடத்திடுவார் அவர்

நல்லவரே அவர் வல்லவரே

என்னை நடத்தும் பாதை எல்லாம் அதிசயம்

– திறந்த

என்னோடு இருக்கின்றார்

என்னை நடத்துவார்

கிருபைகளால் என்னை அலங்கரித்து

நன்மையினால் என்னை மூடி ஆட்கொள்வார்

– திறந்த

கலங்காதே விசுவாசியே

கர்த்தர் உனக்கு துணை

அழைத்தவரே அவர் உண்மையுள்ளவர்

அற்புதமாய் உன்னை நடத்திடுவார்

– திறந்த

தேசத்தின் ஜனங்களே

வேலையை நடத்துங்கள்

கையிட்டு செய்யும் வேலைகள் யாவையும்

ஆசீர்வாதமாய் நடத்திடுவார்

– திறந்த