நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

தில்லாங்கடி தில்லாங்கடி தில்லாங்கடியோ

Thillaangati Thillaangati Thillaangatiyo

Moses Rajasekar

தில்லாங்கடி தில்லாங்கடி

தில்லாங்கடியோ

இயேசு ராஜா பேரைச் சொல்லி

பாட வந்தேங்கோ

வந்து கேளுங்கோ

நின்னு பாருங்கோ – தம்பி

இயேசு ராஜன் பேரைச் சொல்லி

பாட வந்தேங்கோ

எட்டி எட்டி சந்துல பொந்துல

பார்க்கிற தம்பிடோய் நெஞ்ச

தொட்டு பாரு அடுத்த நிமிஷம்

என்னன்னு தெரியுண்டோய்

கட்டுவல கட்டி சத்தான் உன்னை

வச்சியிருக்காண்டோய்

அந்த கட்டுகளத்தான் போக்குற வழியை

சொல்ல வந்தேண்டோய்

– தில்லாங்கடி

நல்லவர் இயேசு நம்

அருகில் வந்திருக்காரு – நம்

கஷ்டமெல்லாம் போக்கும்

வழியை காட்டிடுவாரு

துன்பப்படும் உனக்கு அவர் உதவிடுவாரு

உன் குறைகள் நீக்கி

நிறைவு தந்து நடத்திடுவாரு

– தில்லாங்கடி

அன்பே உருவான தெய்வம் அவரு

அவரை அண்டினோரைத் தள்ளாமல்

சேர்த்துக் கொள்வாரு

பாவிகள் இரட்சிக்கவே உலகில் வந்தாரு

அந்த பாசமுள்ள இயேசுவையே

பாட வந்தோங்கோ

– தில்லாங்கடி