நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

தந்தையே பரிசுத்த தந்தையே

Thanthaiyae Parisuththa Thanthaiyae

Chandrasekaran

தந்தையே பரிசுத்த தந்தையே

நீர் அசீர்வதித்தால் நான்

ஆறுதல் அடைவேன்

உந்தன் பாதத்தின் மத்தியில்

உம்பிள்ளை நான் வாழுகிறேன்

எந்தன் வாழ்க்கையில் நாள்தோறும்

உந்தன் நினைவால் வாழுகிறேன்

– தந்தையே

எந்தன் பெலவீனம் தாங்கிடுவீர்

உந்தன் பெலத்தால் இடைகட்டுவீர்

அதிகாலையில் நாள்தோறும்

உந்தன் பாதத்தில் அமரசெய்யும்

– தந்தையே

எந்தன் தேவனை மத்தியில்

உம் நாமத்தை உயர்த்துகிறேன்

உந்தன் வருகையில் ஆயத்தமாய்

என்னை மறுரூபமாக்கி விடுவீர்

– தந்தையே