பாடல்
தண்ணீரின் மேல் விதையை போட்டா
Thannnneerin Mael Vithaiyai Potta
Moses Rajasekar
தண்ணீரின் மேல் விதையை போட்டா
பல நாட்கள் கழித்து பலனைக் காண்பாய்
கண்ணீரில் விதையை விதைச்சா
கெம்பீரமாய் பலனை அறுப்பாய்
போடு போடு உன் விதையைப் போடு
ஆழம் கண்ட உன் விதையைப் போடு
போடு போடு உன் விதையைப் போடு
காலம் கண்டு உன் விதையைப் போடு
தெருவின் மேல் உன் விதையை போட்டா
பட்சிகள் அதை கொத்தி போகும் – 2
எறியப்பட்டு நாசம் ஆகும்
மிதிக்கப்பட்டு அழிந்து போகும் – 2
– போடு போடு
முட்கள் மேல் உன் விதையை போட்டா
அது நெருக்கப்பட்டு அழிந்து போகும் – 2
கற்கள் மேல் உன் விதையை போட்டா
அது காய்ந்து போகும் உலர்ந்து போகும்
– போடு போடு
நல்ல நிலத்தில் விதையைப் போட்டா
அது நூறு மடங்கு பலனை கொடுக்கும் – 2
வசனமே அந்த விதை
உன் இதயமே விளையும் பூமி
– போடு போடு