நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

தனிமையின் பாதையில் தகப்பனே உம் தோளில்

Thanimaiyin Paathaiyil Thakappanae Um Tholil

Moses Rajasekar

தனிமையின் பாதையில்

தகப்பனே உம் தோளில்

சுமந்ததை நான் மறப்பேனோ

சுமந்ததை நான் மறப்பேனோ – 2

ஆ! எத்தனை அன்பு என் மேல்

எத்தனை பாசம் என் மேல் – 2

இதற்கு ஈடு என்ன தருவேன் நான்

இதற்கு ஈடு என்ன தருவேன் நான்– 2

– தனிமையில்

சோர்ந்து போகும் நேரங்கள் எல்லாம்

மார்போடு அணைத்துக் கொண்டீரே

கண்ணீரைக் கணக்கில் வைத்தீரே

ஆறுதல் எனக்கு தந்தீரே

ஆ! எத்தனை

உடைக்கப்பட்ட நேரங்கள் எல்லாம்

அடைக்கலம் எனக்கு தந்தீரே

தடுமாறும் வேளையில் எல்லாம்

தகப்பன் போல சுமந்து சென்றீரே

ஆ – எத்தனை

பலர் சபித்து என்னை

தூற்றும் போதெல்லாம்

என்னை ஆசீர்வதித்து

உயர்த்தி மகிழ்ந்தீரே – உம்

உள்ளத்துக்குள் என்னை வரைந்தீரே

இதற்கு ஈடு என்ன தருவேன் நான்

ஆ – எத்தனை