நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

தனிமையில் உம்மை ஆராதிக்கிறேன்

Thanimaiyil Ummai Aaraathikkiraen

Ravi Bharath

தனிமையில் உம்மை ஆராதிக்கிறேன்

தன்னதனியாக ஆராதிக்கிறேன்

எல்லோரும் இருந்த போது ஆராதித்தேனே

யாரும் இல்லா வேளையிலும் ஆராதிப்பேனே

அன்னாளில் தோழரோடு ஆராதித்தேனே

இன்னாளில் தனிமரமாய் ஆராதிக்கிறேன்

சந்தோஷமாய் இருந்த போது ஆராதிக்கிறேன்

சுக்கு நூறாய் உடைந்த போதும் ஆராதிப்பேனே

– தனிமையில்

நிறைவாக வாழ்ந்த போது ஆராதித்தேனே

நிலைமாறி வீழ்ந்த போதும் ஆராதிப்பேனே

சுகத்தோடு வாழ்ந்த போதும் ஆராதிப்பேனே

சுகவீனமான போதும் ஆராதிப்பேனே

– தனிமையில்

நல்லவரே உம்மை ஆராதிக்கிறேன்

நன்றி சொல்ல உம்மை ஆராதிக்கிறேன்

ஆண்டவரே உம்மை ஆராதிக்கிறேன்

ஆறுடலே உம்மை ஆராதிக்கிறேன்

உன்னதரே உம்மை ஆராதிக்கிறேன்

உயிர் உள்ளவரை ஆராதிக்கிறேன்