பாடல்
தங்கமணி மாளிகையில் இயேசு பிறக்கவில்லை
Thangamanni Maalikaiyil Yesu Pirakkavillai
Sirkali Yesuprakasam
தங்கமணி மாளிகையில்
இயேசு பிறக்கவில்லை
யூத சிங்கம் இயேசு
தொழுவத்திலே வந்து பிறந்தாரே
தாலாட்டு பாட அங்கு தாதியர் இல்லை
தேவ தூதர் எல்லாம்
பாடியதே தாலாட்டு
ஆராரோ ஆரிரரோ……
ஆரிரரோ ஆரிரரோ
ஆரிரரோ ஆராரோ - 2
சத்தியத்தின் நாயகனாம்
நம் தேவ பிள்ளை அங்கு
சத்திரத்தில் தலை
சாய்க்க இடமுமில்லை
உத்தமராம் கர்த்தர்
இயேசு பாலனுக்கு அங்கு
பெத்லேகேமில் உடுத்தி நிற்க
உடையுமில்லை
– தாலாட்டு பாட
மீட்பவராக பிறந்தவரை
பார்ப்பதற்கு தேவ
தூதர் சென்று சேதி
சொன்னார் மேய்பருக்கு
மன்னருக்கும் மந்திரிக்கும்
அழைப்பு இல்லை மந்தை
மேய்ப்பர்களோ அங்கு
வந்து வாழ்த்துகிறார் –
– தாலாட்டு