நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

தேவனின் ஆலயமே பரிசுத்த ஆலயமே

Thaevanin Aalayamae Parisuththa Aalayamae

தேவனின் ஆலயமே பரிசுத்த ஆலயமே

மகிமையின் ஆலயமே நாமே அவ்வாலயமே

இயேசுவின் இரத்தத்தால் மீட்கப்பட்டோம்

அவருக்காய் கிரயமாய் கொள்ளப்பட்டோம்

தேவனின் ஆவியால் நிரப்பப்பட்டோமே

நாம் தேவ பிள்ளைகளானோம்

அவர் சொந்த ஜனமானோம்

– தேவனின் ஆலயமே

நாம் இனி நம்முடையவர்களல்ல

அவரே நம் சரீரத்தின் சொந்தமானார்

வஞ்சிக்கப்படாமல் தீட்டுப்படுத்தாமல்

பரிசுத்தம் காத்துக் கொள்வோம்

பரிசுத்த ஜாதியாக

– தேவனின் ஆலயமே

கர்த்தருக்குள் என்றும் இசைந்திருப்போம்

அவருடன் ஒரே ஆவியாயிருப்போம்

ஆவியினாலும் சரீரத்தினாலும்

மகிமை செலுத்திடுவோம்

கர்த்தருக்கே என்றும்

– தேவனின் ஆலயமே

இயேசுவின் வருகை நெருங்கிடுதே

அவரின் பிரசன்னம் விரைந்திடுதே

மகிமை மேல் மகிமை அடைந்திடுவோமே

நாம் மறுரூபமாகிடுவோம்

மகிமையில் சேர்ந்திடுவோம்

– தேவனின் ஆலயமே