பாடல்
தேவனின் ஆலயம்
Thaevanin Aalayam
Ravi Bharath
தேவனின் ஆலயம் துதிகளின் ஆலயம்
பரமனின் ஆலயம் பரிசுத்த ஆலயம்
மகிமையின் ஆலயம் மகத்துவ ஆலயம்
நன்றியின் ஆலயம் நாமே அவ்வாலயம்
கண்கள் காண்பது செவ்வையான பார்வையா
எண்ணம் கொண்டது நன்மையான எண்ணமா
கைகள் செய்வது சுத்தமான செயலா
கால்கள் போவது சரியான இடத்திற்கா
நாவு பேசுவது சமாதான வார்த்தையா
சிந்தித்து செயல்படு
உன்னை மாற்றிக் கொள்வாயா
– தேவனின் ஆலயம்
தேவன் கொடுத்ததை அவருக்கே கொடுத்திடு
ஜீவனுள்ள பலியாய் அவருக்கு அளித்திடு
பரிசுத்த பரிசாய் பரமனுக்கு படைத்திடு
குற்றமற்ற கனியாய் கிறிஸ்துவுக்கு கொடுத்திடு
சுயத்தை வெறுத்டு சிலுவையை சுமந்திடு
சரீரம் என்பதை
தேவ ஆலமாயாக்கிடு
– தேவனின் ஆலயம்