நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

தேவனே உம் வார்த்தையால்

Thaevanae Um Vaarththaiyaal

Chandrasekaran

தேவனே உம் வார்த்தையால்

நாள்தோறும் வாழ்கிறேன்

உந்தன் அன்பின் வார்த்தைகள்

எந்தன் வாழ்வில் ஜீவனே – 2

தண்ணீர்களை கடந்தேன்

தேவரீர் என்னோடு இருந்தீர்

ஆறுகளை கடந்தேன்

அவைகள் என்மேல் புரளவில்லை

உந்தன் ஜீவ வார்த்தைகள்

எந்தன் வாழ்வில் போதுமே

எப்பக்கம் நெருக்கப்பட்டேன்

மனம் மடிந்து போகவில்லை

இலங்கை தேசமெங்கும்

இயேசு நாமம் உயர்த்திடுவேன்

– உந்தன்

சத்துரு எதிர்க்கையிலே

தேவ ஆவி கொடி பிடித்தீர்

கிறிஸ்து என் ஜீவன்

மரணமே என் ஆதாயம்

– உந்தன்