நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

தேவாதி தேவன் தெய்வீக மைந்தன்

Thaevaathi Thaevan Theyveeka Mainthan

Sirkali Yesuprakasam

தேவாதி தேவன் தெய்வீக மைந்தன்

கல்வாரி மலையின் முடியினிலே

எந்தனுக்காக உந்தனுக்காக

சிலுவை மரத்தில் பலியானார்

இது தாய் அன்பிலும் மேலானது

எந்த காலத்திலும் மாறாதது

வானம் பூமி அவரது சொந்தம்

விந்தை கிறிஸ்து அவரது நாமம்

கண்ணீர் துடைக்கும் கர்த்தரின் கரங்கள்

காலம் முழுதும் காத்திடும் தேவன்

இன்று போல் என்றுமே

அவர் பாதத்திலே

இருந்தால் இல்லையே தொல்லையே

– இது

ஜீவன் தந்த இயேசுவினாலே

நாளும் நன்மை நமைதொடா்ந்திடுமே

பாவம் போக்கும் பரிசுத்தராலே

பாரில் கிருபை என்றும் பெருகிடுமே

இன்று போல் என்றுமே

அவர் பாதத்திலே

இருந்தால் இல்லையே தொல்லையே

– இது