பாடல்
தேவா உம் நாமத்தைப் பாடி புகழ்வேன்
Thaevaa Um Naamaththaip Paati Pukalvaen
Chandrasekaran
தேவா உம் நாமத்தைப் பாடி புகழ்வேன்
ஆனந்தம் ஆனந்தமே – 2
நீர் செய்த நன்மைகள் ஆயிரமாயிரம்
ஆனந்தம் ஆனந்தமே – 2
ஏழைகளின் தேவனே
எளியோரின் இராஜனே
திக்கற்ற பிள்ளைகளின் தேவனே
கேரூபின் சேராபீன்கள்
ஓய்வின்றி பாடி போற்ற
துதிக்கு பாத்திரரே துதிகளின்
மத்தியிலே வாசம் செய்திடும்
மகிமைக்கு பாத்திரரே
– ஏழைகளின்
காற்றையும் கடலையும்
அடக்கி அமர்த்திய
அற்புத தேவன் நீரே
அக்கினி மதிலாய் நடுவில்
வாசம் செய்யும்
அதிசய தேவன் நீரே
– ஏழைகளின்
ஜாதிகள் முழங்கால்கள்
முடக்கி பணிந்திடும்
உன்னத தேவன் நீரே
நாவுகள் யாவும்
அறிக்கை செய்திடும்
உத்தம தேவன் நீரே
– ஏழைகளின்