பாடல்
தேடி வந்தீர் என்னை கண்டுப்பிடித்தீர்
Thaeti Vantheer Ennai Kannduppitiththeer
Thomas Prithvi
தேடி வந்தீர் என்னை
கண்டுப்பிடித்தீர் உம்
தோளில் என்னை ஏற்றி
சுமந்து செல்கிறீர்
என்ன பாக்கியம் உந்தன்
மேலிருந்து பயணம் செய்வது
கவலை கஷ்டம் ஒன்றும் தெரியாமல்
இளைப்பாறிக் கொண்டு
காணாமல் போனேன்
தவறித் திரிந்தேன் கண்டுப்பிடித்தீர்-
என்னை அணைத்துக்கொண்டீர்
என் மேல்லெல்லாம் நாற்றம்
சகித்து கொண்டீர் இரத்தம்
சிந்தி என்னை கழுவி விட்டீர்
– என்ன பாக்கியம்
உந்தன் அன்பை வெல்ல
என்னத்தை செய்தேன்
உம்மிடம் மட்டும்
நான் தோற்றுப்போனேன் நேச
தொடுதலை நான்
அனுபவிப்பேன்
தினமும் உந்தன் தோளிலிருந்து
– என்ன பாக்கியம்