தேசத்தை சுதந்தரிக்க புறப்படு மகனே
Thaesaththai Suthantharikka Purappadu Makanae
Lucas Sekar
தேசத்தை சுதந்தரிக்க புறப்படு மகனே(ளே)
சேனையின் கர்த்தர் நம் முன்னே நடப்பார்
சேனையின் கர்த்தர் நம் முன்னே நடப்பார் (2)
நிச்சயமா இந்தியாவை சுதந்தரிப்போம் (2)
பெராக்காவில் கூடுவோம் கர்த்தரை உயர்த்துவோம் (20
துதி அல்லேலூயா அல்லேலூயா
துதி அல்லேலூயா அல்லேலூயா – (2)
அல்லேலூயா துதி அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
கட்டாத பட்டணத்த சுதந்தரிப்போம்
நடாத தோட்டங்களை சுதந்தரிப்போம் (2)
சேனையின் கர்த்தர் நம் முன்னே நடப்பார் (2)
சத்துருவ காலாலே மிதித்திடுவோம் (2)
– பெராக்காவில்
யுத்த வீரன் யோசுவாவின் சந்ததியல்லோ
நடந்துபோய் தேசங்களை சுதந்தரிப்போம் (2)
அரணான பட்டணத்தை சுதந்தரிப்போம் (2)
சத்துருவ காலால மிதித்திடுவோம் (2)
– பெராக்காவில்
வாக்குதத்தம் பண்ணப்பட்ட சந்ததியல்லோ
உலகம் முழுவதையும் கலக்கிடுவோம் (2)
பரலோக ராஜ்ஜியம் நம்மிடத்தில் (2)
நிச்சயமா தேசங்கள சுதந்தரிப்போம் (2)
– பெராக்காவில்