நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

தேசமே தேசமே பயப்படாதே

Thaesamae Thaesamae Payappadaathae

Pastor K. S. Wilson

தேசமே தேசமே பயப்படாதே

ஏசு ராஜா உனக்காக யாவையும் செய்வார்

விசுவாசியே நீ கலங்காதே

விசுவாசியே நீ பதறாதே

மகிழ்ந்து பாடு மகிழ்ந்து பாடு

ராஜா வருகிறார்

நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய

பெரிய காரியங்கள் செய்திடுவார்

– விசுவாசியே

நீ போக வேண்டிய தூரமோ வெகுதூரம்

புறப்படு புறப்படு கர்த்தரின் வேலையை செய்

– விசுவாசியே

எழும்பிப் பிரகாசி உன் ஒளி வந்தது

கர்த்தரின் மகிமை உன்மேல் உதித்தது

– விசுவாசியே

சின்னவன் ஆயிரம் ஆயிரமாவான்

சிறியவன் பலத்த ஜாஜியுமாவான்

– விசுவாசியே

கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாவார் உன்

துக்க நாட்கள் இன்றே முடிந்து போனது

– விசுவாசியே

கர்த்தர் உன்னை அதிசயமாய் நடத்திடுவார் நீ

ஒரு நாளும் வெட்கப்பட்டு போவதேயில்லை

– விசுவாசியே