பாடல்
தேனிலும் இனிமையே
Thaenilum Inimaiyae
Moses Rajasekar
தேனிலும் இனிமையே
இயேசுவின் நாமமே
தெளிதேனிலும் மதுரமே
அதற்கிணையில்லை உலகிலே
… ஆ…. ஆ… ஆ…- தேனினும்
கூனரை நிமிரச் செய்யும்
குருடரைப் பார்க்கச் செய்யும்
கேளாத செவிடரை கேட்கச் செய்யும்
மாறாத நல் நாமம் இயேசுவின் நாமம்
… ஆ…. ஆ… ஆ…- தேனினும்
காணக் கிடைக்காத தங்கம் – அவர்
வெண்மையும் சிவப்பும் ஆன தேவன் – 2
தலை தங்க மயமான தேவன்
… ஆ …. ஆ…. -2
இத்தரணியில் இணையில்லா
இயேசுவின் நாமம் –
தேனினும்
ஆகாரம் தரும் அதிமதுரம் – உன்
சரும வியாதிகளை தீர்க்கும் நல் உதிரம் – 2
கலங்கிய உள்ளங்களை தேற்றும்
…… ஆ…. ஆ… ஆ…-
ஜீவ கானானாம் பரலோகம்
கொண்டு நம்மை சேர்க்கும்
– தேனினும்