பாடல்
தேன் இனிமையிலும் இயேசுவின்
Thaen Inimaiyilum Yesuvin
Sirkali Yesuprakasam
தேன் இனிமையிலும் இயேசுவின்
நாமம் திவ்ய மதுரமாமே அதை
தேடியே நாடி ஓடியே
வருவாய் தினமும் நீ மனமே
மனமே தினமும் நீ மனமே
காசினிதனிலே நேசமனதாக
கஷ்டத்தை உச்சரித்தே பாவ
கசடதை அறுத்து சாபத்தை
தொலைத்தார் கண்டுணர் நீ மனமே
கண்டுணர் நீ மனமே
– தேன்
காலையில் பனி போல் மயமாய்
உலகமும் மயமாய் நிங்கி விடும் நீயும்
கர்த்தரின் பாதம் நிச்சயம் நம்பு
கருத்தாய் நீ மனமே
கருத்தாய் நீ மனமே
– தேன்
பாவியை மீட்க தாவியே
உயிரை தாமே தந்தவராம் இன்னும்
மேன்மையாம் கருணை
நிலை பரம் உண்டு
நிதம் துதி நீ மனமே
நிதம் துதி நீ மனமே
– தேன்