நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

தேடுங்கள் கண்டடைவீர்

Thaedungal Kanndataiveer

தேடுங்கள் கண்டடைவீர்

தேவ தேவனின் தூய திருமுகம் காண

தேடிவோம் அதிகாலமே - (2)

சென்ற வாழ்நாளெல்லாம் காத்தார்

எந்த சேதமும் வந்தணுகாமல்

இந்தப் புதுதினம் கண்டடைய

தந்தனரே தமது கிருபை

– தேடுங்கள்

நல்ல சுகம் பெலன் தந்து

தம் வல்ல நல் ஆவியும் ஈந்து

வல்ல பிசாசை ஜெயமெடுத்து

சொல்ல தம் அன்பென்னிலே பொழிந்தார்

– தேடுங்கள்

ஊண் உடை தந்தாதரித்து இந்த

ஊழிய பாதையில் காத்து (2)

கூப்பிடும் வேளை செவி கொடுத்து

கேட்டிடும் யாவையும் ஈந்தனரே

– தேடுங்கள்

ஜீவனுள்ள நாளெல்லாம்

என் தேவனைக் கீர்த்தனம் பண்ணி

ஓசையுள்ள கைத்தாளதோடே

நேசையா இயேசுவை ஸ்தோத்திரிப்போம்

– தேடுங்கள்

காலையில் ஸ்தோத்திர கீதம் இந்த

வேளையில் வேதத்தின் தியானம்

நல் ஜெப தூபம் எனது இன்பம்

நற்கிரியைகள் செய்துழைப்பேன்

– தேடுங்கள்

கர்த்தரை நான் எப்போழுதும் என்

கண் முன்னில் நிறுத்தி நோக்க (2)

நாள் முழுவதும் அவர் பின் நடக்க

நேர்வழி பாதையுங் காட்டிடுவார்

– தேடுங்கள்