பாடல்
தாய் உன்னை மறந்தாரோ
Thaay Unnai Maranthaaro
Lucas Sekar
தாய் உன்னை மறந்தாரோ
தந்தை உன்னை வெறுத்தாரோ
உலகம் உன்னைத் தள்ளியதோ
உன்னைத் தள்ளாத தெய்வமுண்டு
தோள்மீது சுமந்த தாய் கூட ஒருநாள்
மறந்து போவார்கள் (2)
உலகத்தின் முடிவு பரியந்தம் இயேசு
உனக்காய் வாழ்பவரே
உனக்காய் வாழ்பவரே - (3)
– தாய் உன்னை
உம்மேல வைத்த நேசத்தினிமித்தம்
தன்னையே தந்தாரே – (2)
கிறிஸ்துவின் அன்பு ஆழம் அகலம்
விவரிக்க முடியாதைய்யா
விவரிக்க முடியாதைய்யா – (3)
– தாய் உன்னை
மரண பரியந்தம் நடத்திடும் தெய்வம்
இயேசு ஒருவரல்லோ (2)
நித்திய ஜீவனை பெற்றிடவே
கிருபை அளிப்பவரே
கிருபை அளிப்பவரே – (3)
– தாய் உன்னை
கடல் அலைபோல போராட்டம் வந்தாலும்
கலங்கிடத் தேவையில்லை – (2)
கடலுக்குள் பாதை காட்டிடுவாரே
நடத்திச் சென்றிடுவார் – (2)
கானானில் சேர்த்திடுவார்
கானானில் சேர்த்திடுவார் – (3)
– தாய் உன்னை