பாடல்
தாய் தன் பிள்ளையை மறந்தாலும்
Thaay Than Pillaiyai Maranthaalum
Reegan Gomez
தாய் தன் பிள்ளையை மறந்தாலும்
நீர் என்னை ஒரு போதும் மறப்பதில்லை
உலகமே என்னை கைவிட்டாலும்
நீர் என்னை ஒருபோதும் விடுவதில்லை
என்னை படைத்தவரே பாதுகாப்பவரே
நீர் என்றென்றும் எனக்கு போதும்
அல்லேலூயா ஆராதனை
அல்லேலூயா ஆராதனை
கால்கள் தள்ளாடும் நேரங்களில்
கிருபையால் என்னைத் தாங்குகிறீர்
மான்களின் கால்கள் எனக்கு தந்து
இரதங்களை வென்றிட பெலனளித்தீர்
எந்தன் நம்பிக்கையே எந்தன் நங்கூரமே
நீர் என்றென்றும் எனக்கு போதும்
அல்லேலூயா ஆராதனை
அல்லேலூயா ஆராதனை
துன்பங்கள் சூழ்ந்திடும் வேளைகளில்
துதித்திடுவேன் உம்மை புகழ்ந்திடுவேன்
அழைத்தவர் என்னை நடத்திடுவீர்
அதிசயங்கள் தினம் காணச் செய்வீர்
எந்தன் அடைக்கலமே எந்தன் ஆதரவே
நீர் என்றென்றும் எனக்கு போதும்
அல்லேலூயா ஆராதனை
அல்லேலூயா ஆராதனை